சல்மான்கான் - அட்லி படத்தில் ரஜினி நடிக்கிறாரா? தீயாய் பரவும் தகவல்..!

Siva

திங்கள், 24 ஜூன் 2024 (13:41 IST)
இயக்குனர் அட்லி  அடுத்த திரைப்படத்தில் சல்மான் கான் நடித்த இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஷாருக்கான், நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படத்தை இயக்கிய அட்லி, அதன் பின் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த படம் ட்ராப் என்று கூறப்பட்டதை அடுத்து தற்போது அவர் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் அட்லி - சல்மான்கான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என்றும் இது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. முதல் முறையாக சல்மான்கான் மற்றும் ரஜினிகாந்த் நடித்தால், அந்த படம் மாபெரும் ஹிட் ஆகும் என்றும் ரெண்டாயிரம் கோடி ரூபாய் வசூல் செய்ய அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

சல்மான் கான் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் ஒரே படத்தில் அட்லி இணைத்து விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்