நல்ல வேலை வைக்கல... பொல்லாத"வன் படத்திற்கு வெற்றிமாறன் முதலில் வைத்த டைட்டில் இதுதான்!

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (20:49 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் பொல்லாதவன். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக தனுஷ், வெற்றிமாறன் இருவருக்குமே அமைந்தது. Bicycle Thieves என்ற இத்தாலிய திரைப்படத்தின் தழுவலாக வெளிவந்த இப்படம் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 
 
இந்நிலையில் இப்படம் குறித்த ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்திற்கு முதலில் " இரும்புக்குதிரை" என டைட்டில் வைத்தாராம் படத்தின் இயக்குனர் வெற்றிமாறன். ஆனால், அது தயாரிப்பளருக்கு பிடிக்கவில்லை என கூற அவர் வேறு டைட்டில் சொன்னாராம். அது வெற்றிமாறனுக்கு சுத்தமாகவே புடிக்கவில்லையாம். பின்னர் பொல்லாதவன்னு வச்சிட்டு போயிடலாம் என கோபமாக கூறிவிட்டாராம். பின்னர் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்