வியாபாரத்தைத் தொடங்கிய விடுதலை படக்குழு… ஐரோப்பா உரிமத்தைக் கைப்பற்றிய நிறுவனம்!

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (08:03 IST)
கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய  விடுதலை படம் மார்ச் இறுதியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். இந்நிலையில் ஷுட்டிங் முடிந்து தற்போது பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. படத்தின் டப்பிங் சமீபத்தில் நடந்து முடிந்தன. படத்தின் பாடல்கள் மற்றும் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது.

இந்நிலையில் இம்மாத இறுதியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்போது படத்தின் வியாபாரத்தை படக்குழு தொடங்கியுள்ளது. இந்நிலையில் முன்னணி வெளியீட்டு நிறுவனமான அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்