’அசுரன்’ வசனத்தை பேசிய நடிகர் விஜய்! – வெற்றிமாறனின் ரியாக்‌ஷன் என்ன?

ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:23 IST)
நேற்று நடந்த மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் அசுரன் பட வசனத்தை பேசியது குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.



இந்த ஆண்டு பள்ளிகளில் நன்கு படித்து முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு நடிகர் விஜய் கல்வி விருது வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சி நேற்று சென்னையில் விமர்சையாக நடந்தது. இந்த விழாவில் நடிகர் விஜய் பல மணி நேரங்கள் நின்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய நடிகர் விஜய் அசுரன் படத்தில் இடம்பெறும் கல்வி குறித்த வசனத்தை பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அசுரன் பட வசனத்தை விஜய் பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்படத்தின் இயக்குநர் வெற்றி மாறன் “சினிமாவில் நாம் பேசுகிற வசனம் சமூகத்தில் மிகப் பிரபலமான ஒருவர் மூலமாக சென்றடையும்போது அதே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக தான் நான் பார்க்கிறேன். அம்பேத்கர் பெரியார் காமராஜர் உடன் சேர்த்து அண்ணாவையும் படிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்