600க்கு 597 மார்க் எடுத்த என்னை விஜய் ஏன் அழைக்கவில்லை: கண்ணீருடன் மாணவி வாதம்..!

சனி, 17 ஜூன் 2023 (16:08 IST)
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இன்று நடிகர் விஜய் சிறப்பு பரிசு வழங்கினார் என்பதை பார்த்தோம். அந்த வகையில் தான் 12 ஆம் வகுப்பில் 600க்கு 597 மதிப்பெண் பெற்றிருப்பதாகவும் அப்படி பார்த்தால் தான் மூன்றாவது இடம் வந்திருப்பதாகவும் ஆனால் தன்னை விஜய் ஏன் அழைக்கவில்லை என்றும் விழா நடந்த இடத்தின் வாசலில் பிளஸ் டூ மாணவி ஒருவர் கண்ணீருடன் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் உடன் வாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
தான் எடுத்த அதே 597 மதிப்பெண் எடுத்த மாணவியை விஜய் அழைத்திருப்பதாகவும் ஆனால் தன்னை அழைக்கவில்லை என்றும் அந்த மாணவி பிரெஞ்சு பாடம் எடுத்திருப்பதாகவும், ஆனால் நான் தமிழ் பாடம் எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார் 
 
இதனை அடுத்து ஒரு சில தவறுகளால் இது நேர்ந்திருக்கலாம் எனவே இரண்டு நாட்கள் கழித்து நீங்கள் பனையூர் அலுவலகத்திற்கு சென்று விஜய்யை நேரில் சந்தித்து அவரிடம் நேரில் கூறுங்கள், உங்களுக்கு கண்டிப்பாக பரிசு கிடைக்கும் என்று அந்த மாணவி மற்றும் அவருடைய தாயாருக்கு ஆறுதல் கூறி விஜய் மக்கள் இயக்கத்தினர் அனுப்பி வைத்தனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்