விஜய்யின் அரசியல் வருகையால் எனக்கு பாதிப்பா? சீமான் பதில்..!

ஞாயிறு, 18 ஜூன் 2023 (07:40 IST)
விஜய்யின் அரசியல் வருகையால் எனக்கு பாதிப்பா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார். 
 
நடிகர் விஜய் நேற்று கல்வி விழா நடத்திய நிலையில் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் அவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் வாக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இளைஞர்களை பெரும்பாலும் தொண்டர்களாக வைத்துள்ள சீமானுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் என்னிடம் இருக்கும் இளைஞர்கள் வேறு விஜய் இடம் இருக்கும் இளைஞர்கள் வேறு என்றும் நான் அண்ணன் அவர் தம்பி என்றும் தெரிவித்தார். 
 
மேலும் அவர் பாஜக பிரதமர் வேட்பாளராக தமிழரை ஆதரித்தால் பாஜகவை ஆதரிப்போம் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்