கொடுத்த பில்ட் அப்புகளுக்கு எதிர்திசையில் வசூல்… சுணக்கம் கண்ட ‘ஹரிஹர வீர மல்லு’!

vinoth

செவ்வாய், 29 ஜூலை 2025 (12:13 IST)
தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த பவன் கல்யாண் அங்கு ஏகோபித்த ரசிகர் கூட்டத்தைக் கொண்டவர். ஆனால் திடீரென்று அவர் அரசியலுக்கு வந்ததன் காரணமாக சினிமாவில் அவர் தொடர்ச்சியாக இயங்க முடியவில்லை. இந்நிலையில் அவர் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் உருவாக்கத்தில் இருந்த ஹரிஹர வீரமல்லு திரைப்படம் கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.

17ம் நூற்றாண்டில் முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் நடக்கிறது கதை. வீரமல்லு (பவன் கல்யாண்) யாராலும் பிடிக்க முடியாத திருடனாக வலம் வருகிறார். ஒரு சின்ன ஊரில் திருட்டு தொழில் செய்து ஏழை மக்களுக்கு உதவும் ராபின் ஹூட் வகையறாவாக திரியும் வீரமல்லுவிற்கு ஒரு வேலை வருகிறது. முகலாய பேரரசன் அவுரங்கசீப்பிடம் (பாபி தியோல்) இருக்கும் இந்தியாவின் பொக்கிஷமான கோஹினூர் வைரத்தை கொள்ளையடிப்பதுதான் அந்த வேலை. அதை அவர் எப்படி செய்து முடித்தார் என்பதை தெலுங்கி சினிமாவின் டெம்ப்ளேட் மசாலா பாணியில் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த திரைக்கதை ரசிகர்களைக் கட்டிப்போடாத காரணத்தால் கலவையான விமர்சனங்களே ரிலீஸுக்குப் பிறகு வந்தவண்ணம் உள்ளன. இதனால் மிகப்பிர்ம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் இதுவரை 60 கோடி ரூபாய் வசூலைக் கூட தாண்டவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் படம் ரிலீஸான அன்றே படக்குழு வெற்றி விழா சந்திப்பை நடத்தி முடித்துவிட்டது என்பதுதான் நகைமுரண்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்