அஜித், விஜய் இருவரையும் இணைத்து இயக்குவேனா?... இயக்குனர் வெங்கட் பிரபு பதில்!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (14:55 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இப்போது ஒரு தெலுங்கு படம் உருவாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களில் முக்கியமானவர்கள் விஜய் மற்றும் அஜித்.  ரஜினி கமல் ஒப்பீடு போல அடிக்கடி அஜித்- விஜய் ஒப்பீடு நடந்து இருதரப்பு ரசிகர்களுக்கும் அடிக்கடி வலைதளங்களில் மோதல்களும் நடந்து வருவது வாடிக்கையாக உள்ளது. அவ்வப்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற கருத்துகளும் எழும்பும்.

இந்நிலையில்தான் விஜய், அஜித் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதமாக ஒரு சமீபத்தில் வெளியிட்டார் கங்கை அமரன். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், அஜித் இணைந்து நடிக்கும் பேன் இந்தியா லெவல் படம் ஒன்றிற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இப்போது ஒரு குறும்பட நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் வெங்கட்பிரபு “அஜித் மற்றும் விஜய் இருவரும் சம்மதித்தால் அந்த படத்தை இயக்கத் தயாராக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்