தல அஜித்தோடு அடுத்தப்படம் ? –மங்காத்தா 2 குறித்து வெங்கட் பிரபு விளக்கம் !

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (08:48 IST)
அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான ஹிட் படமாக அமைந்த மங்காத்தா படத்தின் அடுத்த பாகம் எப்போது வரும் என ஆவலோடு இருக்க அதுகுறித்து இயக்குனர் வெங்கட்பிரபு விளக்கமளித்துள்ளார்.

வெங்கட்பிரபு சென்னை 28 எனும் கல்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் சரோஜா, கோவா எனத் தனது நண்பர்களை வைத்து மல்டிஸ்டார் படங்களை இயக்கி தனக்கென ஒரு ரூட்டைப் பிடித்து அதில் ஜாலியாகப் போய்க்கொண்டிருந்தார்.

ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக அஜித்தின் 50 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தப் படம்தான் மங்காத்தா. ஹாலிவுட்டில் அதிகமாக வெளிவரும் ஜானர்களில் ஒன்றான  பாய்ஸ்  ஒன்லி படமாக 2011 ஆம் ஆண்டு வெளியானது. அஜித்தின் வில்லத்தனமான நடிப்பைக் கண்டு ரசிகள்கள் குறிப்பாக இளைஞர்கள் புல்லரித்து சில்லறையை சிதற விட்டனர்.

அதுவரை அஜித் படங்கள் எட்டிய கமர்ஷியல் வெற்றிகளை எல்லாம் உடைத்து வசூலில் புது சாதனைப் படைத்தது மங்காத்தா. இப்போது மங்காத்தா வந்து 8 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. பார்ட் 2 காய்ச்சல் இப்போது கோலிவுட்டைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும் வேளையில் பிளாக்பஸ்டர் படமான மங்காத்தா எப்போது வருமென அஜித் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்துகொண்டிருக்கின்றனர்.

இதுபற்றி மங்காத்தா படத்தின் இயக்குனரே இப்போது விளக்கம் அளித்துள்ளார். கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் ரசிகர்களிடம் ‘ உங்கள் எல்லோருக்கும் மங்காத்தா 2 எப்போது வரும் என்ற கேள்வி இருக்கும்… எனக்கும் அந்த ஆசை உண்டு… அந்தப் படத்தை மீண்டும் பண்ணலாமா ? அல்லது வேண்டாமா ? என்ற பயம் எனக்கு இருக்கிறது… ஆனால் அஜித்துடன் கண்டிப்பாக மீண்டும் இன்னொருப் படம் பண்ணுவேன்’ எனக் கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்