இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு கோல்டன் விசா! – அரபு அமீரகம் அளித்த கௌரவம்!

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (08:41 IST)
பிரபல தமிழ் இயக்குனரான வெங்கட் பிரபுவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் வெங்கட் பிரபு. மங்காத்தா, சென்னை 28 உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான சிம்பு நடித்த மாநாடு தமிழில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடியது.

ஐக்கிய அரபு அமீரகம் சிறப்பான நபர்களுக்கு தங்கள் நாட்டிற்கான கோல்டன் விசாவை வழங்கு கௌரவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கி அவரை சிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்