கபாலி இந்தியில் நல்ல வசூலை பெற்றுள்ளது. அதனால் மற்றவர்களுக்கும் ஒரு நப்பாசை. முதல்கட்டமாக அஜித் நடித்த வேதாளத்தை இந்தியில் டப் செய்து வெளியிடுகின்றனர்.
அஜித் படங்களில் அதிகம் வசூலித்தது வேதாளம். அந்தப் படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14 -ஆம் தேதி இந்தியில் டப் செய்து வெளியிடுகின்றனர். படத்துக்கு வேதாளம் என்றே இந்தியிலும் பெயர் வைத்துள்ளனர்.
வடஇந்தியாவில் வெளியாகவிருக்கும் இந்த இந்தி டப்பிங்குக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அஜித்தின் அடுத்தடுத்தப் படங்களை இந்தியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.