உழைக்கும் மக்களுக்கு இன, ஜாதி வெறி வேணாம்.. சிறப்பாக சொன்னது ‘பராரி’! - படக்குழுவை பாராட்டிய திருமாவளவன்!

Prasanth Karthick
ஞாயிறு, 24 நவம்பர் 2024 (13:21 IST)

அறிமுக இயக்குனர் எழில் பெரியவேடி இயக்கி வெளியாகியுள்ள ‘பராரி’ படத்தை விசிக தலைவர் திருமாவளவன் பார்த்து வாழ்த்தியுள்ளார்.

 

 

இயக்குனர் ராஜூ முருகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தற்போது திரைப்பட இயக்குனராகியுள்ளர் எழில் பெரியவேடி. இவர் இயக்கத்தில் அறிமுக நட்சத்திரங்களான ஹரிசங்கர், சங்கீதா கல்யாண் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பராரி. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

 

இனவெறி, சாதி வெறி ஆகியவற்றை விமர்சிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடி வருகிறது. இந்நிலையில் இன்று பராரி படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பார்த்தார்.
 

ALSO READ: ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து..!
 

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசும்போது “உழைக்கும் மக்களுக்கு ஜாதி வெறி, இன வெறி தேவையற்றது. அவ்வாறாக வெறியை தூண்டும் அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும். உழைக்கும் மக்கள் இயல்பாக வாழ வேண்டும். இதை மிகவும் பொறுப்புணர்வோடு படமாக்கியுள்ளார் இயக்குனர் எழில் பெரியவேடி. அவரது முயற்சிக்கு பாராட்டுகள். இத்திரைப்படத்தை அனைவரும் வந்து பார்க்க வேண்டும். வெகுஜனத்திடம் படத்தை கொண்டு சேர்க்க வேண்டும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்