தனுஷின் 'மாரி 2' படத்தில் வரலட்சுமி சரத்குமார்

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (07:15 IST)
தனுஷ், காஜல் அகர்வால், நடிப்பில் பாலாஜிமோகன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவான 'மாரி' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து வரும் ஜனவரி முதல் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் 'மாரி 2' படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தனுஷூக்கு ஜோடியாக நடிக்க வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷூடன் வரலட்சுமி முதல்முறையாக இந்த படத்தில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரி படத்தில் நடித்த காஜல் அகர்வால் தான் மீண்டும் 'மாரி 2' படத்தில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று பரவலாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது திடீரென வரலட்சுமி ஒப்பந்தமாகியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காஜல் அகர்வால், அனிருத் இல்லாத 'மாரி 2' படம் ரசிகர்கள் மத்தியில் எடுபடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்