ஒரு கோடி ரூபாய் கேட்டாரா பீட்டர்பால் முதல் மனைவி? வனிதா அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (07:54 IST)
நடிகை வனிதா மற்றும் அனிமேஷன் இயக்குநர் பீட்டர்பால் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மாலை சென்னையில் உள்ள சர்ச் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர் என்பது தெரிந்ததே. இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வந்ததோடு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இந்த தம்பதிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்
 
ஆனால் திருமணம் முடிந்த அடுத்த நாளே பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். தனது கணவர் பீட்டர்பால் தனக்கு விவாகரத்து அளிக்காமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது
 
இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த வனிதா, பீட்டர்பாலின் முதல் மனைவி ஹெலன், ரூபாய் ஒரு கோடி கேட்டு நிர்ப்பந்திப்பதாகவும், அதன் காரணமாகவே அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் இந்த பிரச்சனையை நாங்கள் சட்டபூர்வமாக அணுகுவோம் என்றும் கூறியுள்ளார்
 
மேலும் ஒரு கோடி கொடுக்கும் அளவுக்கு என்னிடமும் பணம் இல்லை அவரிடமும் பணம் இல்லை என்பதால் இந்த பிரச்சினை சட்டத்தின் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும் என்று கூறினார். மேலும் இந்த திருமணத்தில் பிரச்சனை வரும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும் என்றும் ஆனால் தன்னுடைய பக்கம் இருந்து தான் பிரச்சனை வரும் என்று எதிர்பார்த்ததாகவும் பீட்டர் பால் பக்கமிருந்து பிரச்சனை வரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று வனிதா அந்த பேட்டியில் கூறியுள்ளார்
 
மேலும் பீட்டர் பால் மனைவி கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார் என்றும் தற்போது திடீரென காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததற்கு பின்னணியில் பணம் மட்டுமே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் வனிதாவின் இந்த பேட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்