என்மேல தேவையில்லாம அவதூறு பரப்புறாங்க! – கஸ்தூரி, லெட்சுமி மீது வனிதா புகார்!

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (15:22 IST)
தனது தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்கள் குறித்து அவதூறுகளை பரப்புவதாக நடிகை கஸ்தூரி மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதா புகார் அளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா சில நாட்களுக்கு முன்னதாக பீட்டர் பால் என்பவரை காதலித்து மணந்தார். பீட்டர் பால் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து ஆனவர். வனிதாவின் இந்த திருமணம் சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் பீட்டரின் முன்னாள் மனைவி எலிசெபத்தை வைத்து லெட்சுமி ராமகிருஷ்ணன் விவாதித்த வீடியோ வைரலானதுடன், லட்சுமி ராமகிருஷ்ணனுடன் வனிதா சண்டையிட்ட வீடியோக்களும் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி உள்ளன. வனிதாவின் செயல்பாடுகள் குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட அதற்கு வனிதா பதிலளிக்க அந்த பக்கமும் பிரச்சினை தொடங்கியது.

இந்நிலையில் தற்போது வனிதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நடிகை கஸ்தூரி மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 4 நபர்களை குறிப்பிட்டுள்ள வனிதா, அவர்கள் தனது தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்