2010 முதல் 2016 வரை விஜய், அஜித் போன்ற நட்சத்திரங்களுடன் நடித்த காஜல், திருமணம் முடிந்த பின்னர் நடிப்பதை குறைத்து கொண்டார்.
திரைத்துறையில் மீண்டும் முன்னணி நாயகியாக நிலைபெறும் நோக்கில், காஜல் அகர்வால் தனது இளமை தோற்றத்தை புதுப்பித்துக் கொள்ளும் 'டீ-ஏஜிங்' சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு அழகு சார்ந்த சிகிச்சை என்றாலும் இதனை காஜல் அகர்வால் உறுதி செய்யவில்லை.