'வலிமை' பட ரிலீஸ் தேதியில் மாற்றம் !

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (19:58 IST)
வலிமை பட ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்துள்ளதாகவும் அதன்படி வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வலிமை படம் வெளியாகும் என தகவல் வெளியாகிறது.

போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார்- பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி  நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை.

இப்படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலானது.

அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு  அதாவது ஜனவரி 12 அல்லது 13 தேதியில் வலிமை படம்  வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், வலிமை பட ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்துள்ளதாகவும் அதன்படி வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வலிமை படம் வெளியாகும் என தகவல் வெளியாகிறது.

மேலும், மல்டிபிளக்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா என்ற அமைப்பு அடுத்த 3 மாதங்களுக்கு வெளியாகவுள்ள திரைப்படங்களின் தேதியை அறிவித்துள்ளது.

அதில், ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரபாஸ் – பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஸ்யாம் படமும் இதே நாளில் வெளியாகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. எனவே அஜித்தின் வலிமை படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்