வலிமை லுக்கில் வைரலாகும் யங் அஜித்...!

Webdunia
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (13:06 IST)
தல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் 'வலிமை'படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இப்படத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் போது அவருக்கு விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 
 
இருந்தாலும் முதலுதவி மட்டும் எடுத்துக்கொண்டு தொடர்ந்து அஜித் அந்த போஷனை முடித்து கொடுத்ததாக தகவல்கள் கூறப்பட்டது. இருந்தாலும் சில நாட்கள் தொடர்ந்து அவர் ஓய்வில் இருப்பார் என தகவல் வெளியான நிலையில் தற்போது அஜித்தின் நியூ லுக் புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது. 
 
கருப்பு நிறத்தில் கோட் ஷூட் அணிந்து க்ரே ஹேரில் இளமையாக அஜித் தோன்றுகிறார். இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் சமூகலைத்தளங்களில் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்