பாலியல் சீண்டலில் ஈடுபட்டாரா மகத்? - வைஷ்ணவி புகார்

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (12:50 IST)
பிக்பாஸ் வீட்டில் நடிகர் மகத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற மகத் பெண்களிடம் குறிப்பாக ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுடன் அதிக நெருக்கம் காட்டினார். யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா படுக்கை அறையில் படுத்துக்கொண்டு அவர் அடித்த லூட்டிகள் புகைப்படமாக வெளிவந்தன. அதோடு, யாஷிகாவின் உடலில் மகத் கை வைத்திருந்த சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பலரையும்  முகம் சுளிக்க வைத்தன.
 
பிக்பாஸ் வீட்டிலிருக்கும் பெண் போட்டியாளர்களிடம் மகத் வரம்பு மீறி செயல்படுவதாக டேனியல் பாலாஜியும் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், அந்த விஷயத்தை கமல்ஹாசன் விவாதிக்காமல் தவிர்த்து விட்டார்.
 
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வைஷ்ணவி தனது டிவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். மகத் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார். இதை நான் வெளியில் வந்த பிறகே உணர்ந்தேன். 32 வயதாகியும் அவர் இன்னும் பக்குவமடையவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்