இயக்குனர் சீனுராமசாமிக்கு பாடல் கொடுக்க மறுத்த வைரமுத்து !

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (22:10 IST)
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள 'கண்ணே கலைமானே' திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் திரையரங்குகளில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார்.
 
ஒரு நாள் காதலன், காதலியின் அழகை வர்ணிக்கும் வகையில் ஒரு பாட்டு எழுதி அந்த பாட்டை போனிலேயே இயக்குனர் சீனுராமசாமிக்கு படித்து காட்டினாராம் வைரமுத்து. அந்த பாட்டு மிக அருமையாக இருந்ததை கேட்டு ரசித்த சீனுராமசாமி, அந்த பாட்டுக்கு ரூ.10 லட்சம் வாங்கி தருகிறேன், எனக்கு அந்த பாட்டை கொடுங்கள் என்றாராம்.
 
ஆனால் வைரமுத்து அந்த பாடலை சீனுராமசாமிக்கு கொடுக்க மறுத்துவிட்டாராம். இந்த பாடல் சீமான் திரைக்கதையில்  சுப்பிரமணியன் இயக்கி வரும் 'அமீரா' என்ற படத்திற்காக எழுதியதாகவும், எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த பாட்டு அந்த படத்திற்குத்தான் என்றும் கூறிவிட்டாராம்.
 
அமீரா' படத்தில் சீமான், ஆர்.கே.சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஒரு திருடனின் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிட்ட பிறகு அவனுடைய வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்பதுதான் இந்த படத்தின் கதையாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்