கே.பாலச்சந்தருக்கு, அவருடைய சொந்த ஊரில் சிலை திறக்கிறார் வைரமுத்து.
இளையராஜாவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு பாடல் எழுத வாய்ப்பில்லாமல் வைரமுத்து தவித்தபோது, தன்னுடைய படங்களில் பாடல்கள் எழுத வாய்ப்பளித்தவர் கே.பி. பிறகு, தங்களுடைய தயாரிப்பில் உருவான ‘ரோஜா’ படத்தில், ஏ.ஆர்.ரஹ்மானிடம் சொல்லி எல்லாப் பாடல்களையும் எழுத வைத்தார். அதுதான் இன்றளவும் வைரமுத்துவை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
அதற்கு நன்றிக்கடனாக, கே.பி.யின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தில், கே.பி.யின் வெண்கலச் சிலையைத் திறக்கிறார் வைரமுத்து. ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவில், கமல் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைக்கிறார். ‘சூப்பர் ஸ்டார்’ என்று இன்றைக்கு உலகமே கொண்டாடும் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் கே.பி.