ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு ராம்சரண் நடிப்பில் உருவான கேம்சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்க தில் ராஜூ தயாரித்து சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் செய்தனர். சங்கராந்தியை முன்னிட்டு பெரிய வசூலை அள்ளலாம் என முடிவு செய்து இந்த படத்தை இறக்கினர். ஆனால் படம் பப்படம் ஆனது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இந்த படம் வசூலில் கோட்டை விட்டு தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டத்தைக் கொடுத்தது.
ஆனால் அந்த படத்துக்கு சில நாட்கள் கழித்து ரிலீஸான சங்கராந்திக்கு வஸ்துனம் என்ற வெங்கடேஷின் படம் 276 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து கலக்கியுள்ளது. அனில் ரவுபுடி இயக்கிய இந்த படம் மீடியம் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படத்தில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் ஆகியோர் நடித்திருந்தனர். வெங்கடேஷின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் படமாக இந்த படம் அமைந்துள்ளது. இதன் மூலம் கேம்சேஞ்சர் படத்தின் மூலம் இழந்த நஷ்டத்தை இந்த படத்தின் மூலம் தில் ராஜு ஈட்டி விடுவார் என சொல்லப்படுகிறது.