இந்தியன் 2 வால்தான் வடிவேலு இப்போது நடிக்க முடியாமல் இருக்கிறாராம்!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (10:52 IST)
நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்கவில்லை. இடையில் சில படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் அவர் பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. இந்நிலையில் தனது வெற்றிப்படமான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். இதனால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டது.

இந்நிலையில் இப்போது முன்னணி தயாரிப்பாளர்கள் சிலர் சேர்ந்து அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துகின்றனராம். வடிவேலுவும் ஒரு குறிப்பிட்ட தொகையை நஷ்டத்துக்காக கொடுப்பதாக ஏற்றுக்கொண்டாராம். ஆனால் இயக்குனர் ஷங்கர் மற்றும் லைகாவுக்கு இடையில் இருக்கும் இந்தியன் 2 படத்தின் பிரச்சனை முடிந்ததும்  இந்த பிரச்சனையை முடித்துக் கொள்ளலாம் என லைகா சொல்லியுள்ளதாம்.
இதனால் விரைவில் வடிவேலு மீதான தடை நீக்கப்படும் என சொல்லப்படுகிறது. ஆனால் வடிவேலு மீதான தடை நீக்கப்பட்டாலும் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி திரைப்படம் உருவாக வாய்ப்பில்லை என இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்திய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்