நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் ரசிகர்களுக்காக இதுவரை ஒரு போஸ்டர் கூட வெளியிடாமல் இழுத்தடித்து வருகிறது படக்குழு. இது சம்மந்தமாக முன்னதாக போனி கபூரை கேலி செய்யும் விதமாக சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதும், அரசியல் மேடைகள் மற்றும் கிரிக்கெட் மைதானங்களில் வலிமை அப்டேட் கேட்பது என அஜித் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் சுற்றி வந்தனர்.
இந்நிலையில் இயக்குனர் ஹெச் வினோத் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வலிமை படத்தின் அனைத்து வியாபாரங்களும், வெளிநாடு, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையும் விற்பனை செய்யப்பட்டு விட்டது எனக் கூறியுள்ளார்.