பல வருடங்களுக்கு பின் ஏவிஎம் ஸ்டுடியோ சென்ற வடிவேலு!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (21:34 IST)
நடிகர் வடிவேலு சினிமாவில் நடிப்பதற்கு ரெட்கார்டு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் அந்த தடை நீக்கப்பட்டது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் நாய் சேகர் உள்பட ஒருசில படங்களில் நடிக்கவே ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்று முதல் முறை நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஏவிஎம் ஸ்டூடியோவில் வடிவேலு சென்றதாக கூறப்படுகிறது
 
நாய் சேகர் படத்தின் போட்டோ ஷுட் ஏவிஎம் ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றதாகவும் அதில் வடிவேலு கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் நாய் சேகர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பு அதன் பின்னர் கோவை மதுரையில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்