உதவியாளர் கொலை மிரட்டல் புகாரில் வடிவேலு தலைமறைவு?

வியாழன், 9 ஜனவரி 2020 (14:47 IST)
தமிழ் சினிமாவில் காமெடியனாக ஒட்டுமொத்த ரசிகர்களின் பேவரைட் நடிகராக பார்க்கப்பட்டவர் வைகை புயல் வடிவேலு. 23 ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகம் படத்தால் இயக்குனர் சங்கருக்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட பிரச்னையால் படங்களில் நடிப்பதை  நிறுத்திவிட்டு சினிமாவில் இருந்தே ஒதுங்கிவிட்டார் வடிவேலு. 
 
இருந்தாலும் தற்போதுள்ள மீம் கிரியேட்டர்களுக்கு வடிவேலுவின் வசனங்கள் தான் ஒரு பூஸ்ட் அந்த அளவிற்கு வடிவேலு இல்லாத மீம் மற்றும் வீடியோ வேர்சன் இல்லாத மீம் பக்கங்களே கிடையாது. அந்த அளவிற்கு சோசியல் மீடியாக்களில் தலைவர் ட்ரெண்டாகி வருகிறார். இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வடிவேலுவை வைத்து ‘எலி’ படத்தை தயாரித்த மதுரையை சேர்ந்த தயாரிப்பாளர் சதீஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். வடிவேலுவை வைத்து சதீஷ் தயாரித்த எலி படத்தில் 9 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இவருக்கும், வடிவேலு தரப்புக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது இதனால் சதீஷ்குமாரின் வீட்டுக்குள் புகுந்த வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன் என்பவர்  ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் கோவிந்தராஜ் என்பவரையும் தாக்கியுள்ளார்.
 
அதையடுத்து உதவியாளர் மணிகண்டன் மற்றும் அவருடன் சென்ற 2 நபரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட நடிகர் வடிவேலு தலைமறைவாகிவிட்டார் என்ற தகவல் பரவலாக பேசப்பட்டது. பின்னர் இது குறித்து ஊடகங்களுக்கு பேசிய நடிகர் வடிவேலு.... இது வெறும் வதந்தி....நான் கடந்த வாரம் என் குலதெய்வம் கோவிலுக்கு சென்றிருந்தேன் அதற்குள் இப்படி  பொய்யான தகவல் பரப்பி விட்டார்கள் என கூறினார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்