வாத்தி இயக்குனரின் அடுத்த படத்தில் துல்கர் சல்மான்… வெளியான தகவல்!

திங்கள், 15 மே 2023 (07:25 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் தனுஷ், சம்யுக்தா மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸான திரைப்படம் வாத்தி. இந்த படத்தை தெலுங்கு இயக்குனரான வெங்கட் அட்லூரி இயக்கி இருந்தார். கலவையான விமர்சனங்க்களை பெற்றிருந்தாலும் இந்த படம் வசூலில் குறைவைக்கவில்லை.

இந்நிலையில் வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கும் புதிய படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ஐந்து மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸாக வரும் இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்