சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் கொடுக்க முடியாது- இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன்!

J.Durai
புதன், 24 ஏப்ரல் 2024 (14:57 IST)
சந்தோஷ் நம்பீராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘உழைப்பாளர்கள் தினம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. 
 
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
 
இந் நிகழ்ச்சியில் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், 
 
“56 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகரமாக இருக்க கூடிய சிங்கப்பூர் தேசத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தொடர்பான படம் என்று சொன்னார்கள்.
 
இப்போது ஹாலிவுட் படங்களை பார்த்துவிட்டு, அதில் இருந்து ஒரு கதையை தயார் செய்துவிடுகிறார்கள், எங்களுக்கு அப்படிப்பட்ட வசதியில்லை. அதனால், எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவரிடமும் போகாமல் தனி பாதையில் பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்படி இருந்தும் எம்.ஜி.ஆர் படம் பண்ணலாம் என்று என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறார். ஆனால்,உங்களை வைத்து படம் பண்னும் அளவுக்கு நான் திறமைசாலி இல்லை” என்று சொல்லி நான் மறுத்துவிடுவேன். இருந்தாலும், அவருடைய கட்டாயத்தின் பேரில் ‘தெய்வத்தாய்’ என்ற படத்திற்கு மட்டும் திரைக்கதை, வசனம் எழுதினேன்” என்றார். அதேபோல், இயக்குநர் பாலுமகேந்திரா எங்களுக்கு நெருக்கமானவர். அவர் கடைசியாக தலைமுறை என்ற படம் எடுத்தார். இயக்குநர் ராஜு முருகன், இன்று நேற்று நாளை படம் எடுத்த ரவிக்குமார், பாரதிராஜா இப்படி பலரை சந்தித்ததோடு, கமல் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவரை சந்தித்தேன். ‘உழைப்பாளர்கள் தினம்’ படம் எடுக்கப்பட்டிருக்கும் கீழை தஞ்சை பகுதியை தலைகீழாக புரட்டிப்போட்ட மகத்தான தலைவர் ஒருவர் இருந்தார், அவர் பெயர் பி.சீனிவாசராவ். அவர் பிறந்தது கர்நாடகாவில், படித்தது பெங்களூரில். காந்திஜியின் அழைப்பை ஏற்று சென்னை வந்தவர், கம்யூனிசம் இயக்கத்தில் சேர்ந்தார். அதன் பிறகு கீழை தன்சைக்கு சென்றார். தமிழ் சுமாராக பேசினாலும், தமிழ் எழுத படிக்க தெரியாதவர். 
நாகை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழை தஞ்சையில் கம்யூனிசம் வளர்ந்ததற்கு கர்நாடகாவில் பிறந்த் பி.சீனிவாசராவ் தான் காரணம் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 
படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சந்தோஷ் நம்பீராஜன்  
பேசுகையில், 
 
“இந்த படத்தின் கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், வெளிநாட்டு உழைப்பாளர்களைப் பற்றிய படம் இங்கு எப்படி ஓடும், வெளிநாடுகளில் ஓடிடி வந்துவிட்டதே, அவர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், உழைப்பாளர் தினம் என்ற தலைப்பை சொன்ன உடன் சிங்கப்பூர் துரைராஜ், ரஜேந்திரன் சார், எங்க அண்ணன் நம்பிராஜன் , கடலூர் ஜான், பொண்ணுசாமி புருஷோத்தமன், பாண்டுதுரை, சரஸ் என அனைவரும் குழுவாக சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம்
 
இப்போது கூட இது பற்றி பேச வேண்டுமா என்று யோசித்த போது, பலர், “நீ இப்போது தான் வளர்கிறாய், இது பற்றி பேசாதே” என்றார்கள், பிறகு வளர்ந்தவுடன் வளர்ந்துட்ட நீ பேசாதே, என்பார்கள், பிறகு எப்போது, யார் தான் பேசுவார்கள். வசூலை வைத்து ஒரு நடிகரை தீர்மாணிக்காதீர்கள், அவர்களுடைய படம் எப்படிப்பட்ட சிந்தனையை ஏற்படுத்துகிறது என்பதை பாருங்கள். 
 
நடிகர்கள் தான் கதையையும், இயக்குநரையும் தேர்வு செய்கிறார்கள், தயாரிப்பாளரையும் தேர்வு செய்கிறார்கள். அதனால் தற்போதைய தமிழ் சினிமா நடிகர்கள் கையில் தான் இருக்கிறது. மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் ஹீரோ யார்? கதை தான், ஆனால், மஞ்சுமல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம், அந்த கதையை தமிழ் சினிமா தயாரிப்பாளரிடம் சொல்லியிருந்தால் எடுத்திருக்க முடியுமா? என்றால் மவுனம் தான் அதற்கு பதில். 
 
படத்தின் கதாநாயகி குஷி பேசுகையில்,
 
 “நான் கர்நாடாக மாநிலத்தைச் சேர்ந்தவள், இந்த படத்தில் மாலதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த சந்தோஷ் சாருக்கு நன்றி. என்னை சிபாரிசு செய்த இணை தயாரிப்பாளர் சிவா சாருக்கு நன்றி. இந்த படத்தின் போட்டோ ஷூட் நடந்த போது, தமிழ் எனக்கு சரியாக பேச வரவில்லை. அப்போது இயக்குநர் இது கிராமத்து கதை, தமிழ் வசனங்களை சரியாக பேசுவீங்களா? என்று கேட்டார். நான் உடனே முயற்சிக்கிறேன் சார், என்றேன். என்னை நம்பி அவர் இந்த வாய்ப்பை கொடுத்தார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே அந்த கிராமத்திற்கு என்னை அழைத்துச் என்று அம்மக்களுடன் பழக வைத்தார்கள். அதன் மூலம் கிராம வாழ்க்கையை பற்றி தெரிந்துக்கொண்டேன்.
 
அப்படி ஒரு வேடத்தில் என்னால் முடிந்தவரை நடித்திருக்கிறேன், பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள்.” என்றார்.
 
தயாரிப்பாளர் நந்தகுமார் பேசுகையில்,
 
”கம்யூனிசத்தலைவர் கலந்துக்கொண்ட இந்த நிகழ்ச்சியை பெருமையாக பார்க்கிறேன். நண்பர் சிங்கப்பூர் துரைராஜ் மூலமாகத் தான் இங்கே வந்தேன். இந்த மேடையை ஒரு புத்துணர்ச்சி மிக்கதாகவும், அறிவுச்சார்ந்தததாகவும் பார்க்குகிறேன். இயக்குநர் சந்தோஷ் பேசிய எதிலும் நான் இல்லை. நான் தயாரிப்பாளராக ஐந்து படம் பண்ணியிருக்கேன், எக்ஸ்கியூட்டி கம் தயாரிப்பாளராக ஐந்து படம் பண்ணியிருக்கேன். நான் சென்னைக்கு வந்து 20 வயதிலேயே ரெப்பாக சாதாரணமாக இருந்து, சிறு சிறு படங்களை வாங்கி விநியோகஸ்தராக வளர்ந்தேன். பிறகு தயாரிப்பாளராகலாம் என்று தான் கலாபக்காதலன் என்ற படம் பண்ணேன். அதை தொடர்ந்து அடுத்தடுத்து 10 படங்கள் தயாரித்தேன், அதில் 8 படங்கள் எனக்கு பெரும் நஷ்ட்டத்தை கொடுத்தது. விமல், ஓவியாவை வைத்து ‘சில்லுனு ஒரு சந்திப்பு’ படம் தயாரித்தேன், அதன் பிறகு எனது சினிமா வாழ்க்கையே முடிந்துவிட்டது. 
 
புதியவர்களின் வலி தெரியும், அதனால் தான் நாம் திறமையானவர்களை உருவாக்க வேண்டும், என்று பலரை உருவாக்கினேன்.  என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்