விவசாய இளைஞனாக நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2017 (18:51 IST)
சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில், விவசாய இளைஞனாக நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
 
பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘நிமிர்’ படத்தில் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இந்தப் படத்தில் நமிதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளார். ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக் இது.
 
இந்தப் படத்துக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்தப் படம், விவசாயம் பற்றி எடுக்கப்படுகிறது. அதில், விவசாய இளைஞனாக நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
ஹீரோயின் மற்றும் டெக்னீஷியன்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
 
ஒளிப்பதிவாளராக ஜலந்தர் என்பவர் அறிமுகமாகிறார். இவர் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். சில குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்