ஹர ஹர மஹாதேவஹி என்ற பிட்டு படத்தை எடுத்தவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக், நிக்கி கல்ரானி நடித்திருந்தனர். ஆபாச வசனங்களால் நிரம்பிய இந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தை இயக்கி வருகிறார் சந்தோஷ். கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. அதில், புத்த துறவியாக நடிக்கிறார் ஜான் விஜய்.