கொல மாஸ்! பிகில் கிளப்பும் ரசிகர்கள்... டிவிட்டரை ஆளும் தளபதி!!

Webdunia
சனி, 22 ஜூன் 2019 (09:02 IST)
நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 63 படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியானது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 
 
நடிகர் விஜய் தற்போது அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். 
 
இந்த படத்தில் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருக்கிறார். இதில் மகன் கேரக்டரின் பெயர் மெக்கேல் என்றும் தந்தை கேரக்டரின் பெயர் பிகில் என்றும் தெரிகிறது.  
படம் குறித்த அப்டேட் எல்லாம் ஒருபுறம் இருக்க, விஜய் ரசிகர்கள் டிவிட்டரை கலக்கி வருகிறனர். விஜய் பிறந்தாள் குறித்த ஹேஸ்டேக்குகள் டிவிட்டரை திண்றடித்து வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து டிரெண்டிங் ஹேஸ்டேக்கும் விஜய் பற்றியே உள்ளது. 
 
#Bigil2ndLook, #happybirthdayTHALAPATHY, #HBDThalapathyVIJAY, #HBDEmientVijay, #Happybirthdayeminentvijay, #Happyyyybirthdaythalaivaaaaaa என்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி விஜய் ரசிகர்கள் டிவிட்டரை அதகலப்படுத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்