’கோட்’ சிங்கிள் பாடல்.. விஜய்யுடன் பாடுவது பவதாரிணி.. ஏஐ டெக்னாலஜியின் மாயாஜாலம்..!

Siva

வெள்ளி, 21 ஜூன் 2024 (19:43 IST)
தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பாடலை விஜய் பாடுகிறார் என்றும் வெங்கட் பிரபு அறிவித்து இருந்தார். 
 
ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலையும் விஜய் பாடிய நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடலையும் அவரே பாடியிருக்கிறார் என்ற தகவல் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அழைத்துள்ளது. 
 
இந்த நிலையில் சின்ன சின்ன கண்கள் என்ற இந்த பாடலை விஜய்யுடன் சேர்ந்து இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி பாடியுள்ளார் என்ற தகவலையும் வெங்கட் பிரபு சற்று முன் அறிவித்துள்ளார். கடந்து சில மாதங்களுக்கு முன்னால் பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக காலமான நிலையில் அவரது குரலை ஏஐ டெக்னாலஜி மூலம் பயன்படுத்தி விஜய் உடன் இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாட வைத்துள்ளார். 
 
ஏஐ டெக்னாலஜியின் மாயாஜாலம் மூலம் பவதாரிணி குரலை உயிர்ப்பித்துள்ள யுவன் சங்கர் ராஜாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்