சினிமாவில் கதாநாயகியாக களம் இறங்கும் ப்ரியா பவானி சங்கர்...

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (12:08 IST)
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து, அதன் பின் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த நடிகை ப்ரியா பவானி சங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


 

 
விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம்  முதல் காதல் வரை நாடகத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் ப்ரியா. அவருக்கு பல சினிமா வாய்ப்புகள் வந்தும் அவர் நடிக்க மறுத்தார். விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
 
இந்நிலையில், புதிதாக தொடங்கப்படவுள்ள ஒரு தமிழ் சினிமாவில் அவர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். அப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் 15 நாட்களில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. 


 
அடுத்த கட்டுரையில்