அப்படி ஒருவரை சந்திக்கவில்லை என்றால் திருமணமே இல்லை: த்ரிஷா

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (10:57 IST)
நடிகை த்ரிஷாவுக்கு தற்போது 37 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாத நிலையில் நான் எதிர்பார்க்கும் நபர் ஒருவரை சந்திக்க வில்லை என்றால் திருமணம் ஆகாமல் அப்படியே இருந்து விடுவேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த 1983 ஆம் ஆண்டு பிறந்த நடிகை திரிஷாவுக்கு தற்போது 37 வயதாகிறது. கடந்த 1999ஆம் ஆண்டு ஜோடி என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார் த்ர்ஷா. அதன் பின் தற்போது கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் த்ரிஷாவுக்கு ஏற்கனவே தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயமாகி பின்னர் அந்த திருமணம் நின்றுவிட்டது. அதன் பின்னர் ராணாவுடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் ராணாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது 
 
இந்த நிலையில் தனது திருமணம் குறித்து த்ரிஷா கூறிய போது ’என்னை நன்றாக புரிந்து கொள்ளும் நபர் கிடைத்தால் தான் திருமணம், ஒருவேளை அப்படிக் கிடைக்கவில்லை என்றால் அப்படி ஒருவரை சந்திக்க வில்லை என்றால் திருமணம் ஆகாமல் இப்படியே இருந்து விடுவேன் என்று த்ரிஷாவுக்கு கூறியுள்ளார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்