இங்கிலாந்து குண்டுவெடிப்புக்கு ட்விட்டரில் பதறிய த்ரிஷா, ஹன்சிகா

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (15:41 IST)
இங்கிலாந்தில் பாப் இசை நிகழ்ச்சியின்போது நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து அறிந்த இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளனர். 


 

 
இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் நகரில் பிரபல அமெரிக்க பாப் இசை பாடகி அரியானா கிராண்டின் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில், வெடிகுண்டு வெடித்து 22 பேர் மரணமடைந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 
 
இந்த சம்பவத்திற்கு இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளனர். நடிகைகள் த்ரிஷா, ஹன்சிகா மற்றும் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்