பவுடர் கம்பெனியில் பல கோடி வாங்கினாரா த்ரிஷா?

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (22:57 IST)
ஒரு பக்கம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு சாட்டிலை டிஷ் விளம்பரத்திற்காக பலகோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக செய்தி வெளிவந்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் நயன்தாராவுக்கு போட்டியாக கடந்த 13 வருடங்களாக தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் த்ரிஷாவுக்கும் கோடிக்கணக்கில் வருமானம் வரும் வகையில் ஒரு விளம்பரம் வந்துள்ளதாம்



 
 
ஆம், கோகுல் சாண்டல் பவுடர் நிறுவனம் த்ரிஷாவை விளம்பர தூதர் ஆக்கியுள்ளது. இதற்காக பலகோடி சம்பளம் பேசியிருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று போட்டோஷூட்கள் எடுக்கப்பட்டுள்ளது.
 
விரைவில் த்ரிஷா நடிக்கும் புதிய கோகுல் பவுடர் விளம்பரம் தொலைக்காட்சிகளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை நடிகை த்ரிஷா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்