கன்னட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் த்ரிஷா!

Webdunia
ஞாயிறு, 25 ஜூலை 2021 (15:00 IST)
கன்னட சூப்பர் ஸ்டார் நடிகருக்கு ஜோடியாக நடிக்க நடிகை த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
நடிகை த்ரிஷா தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார் என்பதும் அவர் தற்போது சுமார் 5 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கன்னடத்தில் சூப்ப்ர் ஸ்டார் புனித் ராஜ்குமர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ’த்வெட்யா’ என்ற திரைப்படத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
இந்த படத்தை பவன் குமார் இயக்கி வருகிறார் என்பதுவும் இந்த திரைப்படத்தில் புனித் ராஜ்குமார் ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்து விட்டதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே நடிகர் புனித் ராஜ்குமார் ஜோடியாக பவர் என்ற கன்னட படத்தில் த்ரிஷா நடித்துள்ளார் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்