தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் அவரை தெலுங்கு சினிமா உலகினர் ஓரங்கட்டிவிட சென்னைக்குள் தஞ்சம் புகுந்தார் ஸ்ரீரெட்டி. பின்னர் தமிழ் சினிமாவிலும் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் பற்றியும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார். மேலும் சக நடிகைகளையும் அவர் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவரளித்த நேர்காணல் ஒன்றில் நீங்கள் போலிஸ் ஆனால் முதலில் யாரை கைது செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் இயக்குனர் முருகதாஸையும், நடிகர் விஷாலையும்தான் கைது செய்வேன். அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்ததும் விடுதலை செய்துவிடுவேன் எனக் கூறியுள்ளார்.