ஹீரோவாக மாறும் சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்.. மாஸ் வீடியோ வெளியீடு..!

Mahendran

வியாழன், 22 மே 2025 (12:20 IST)
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், அயலான் போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஹீரோவாக மாறிய நிலையில், இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
நயன்தாரா நடித்த அறம் என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ராஜேஷ். அதன் பிறகு, குலேபகாவலி, ஐரா, ஹீரோ, டாக்டர், அயலான் உள்ளிட்ட பல படங்களை அவர் தயாரித்தார். மேலும் விஸ்வாசம் உள்பட சில படங்களை இவர் விநியோகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், அவரே ஹீரோவாக நடிக்கும் ஒரு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு வீடியோ மூலம் அவர் ஸ்போர்ட்ஸ்மேன் கதாபாத்திரத்தில்  நடிக்க இருப்பதாக தெரிகிறது. மேலும், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் உள்பட பல திரையுலக பிரபலங்கள் ஹீரோவாக மாறிய நிலையில், தற்போது ஒரு தயாரிப்பாளரும் ஹீரோவாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்