இதற்கிடையில் கலைத்துறையில் அவர் செய்த பங்களிப்புக்காக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் சமீபத்தில் அளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்டு சென்னைத் திரும்பினார். தற்போது தன்னுடைய கனவான கார் ரேஸ் பந்தயங்களில் மீண்டும் ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ள அஜித், வருடத்துக்கு ஒரு படம் என நடிக்கும் முடிவில் உள்ளாராம்.
இந்நிலையில் அஜித்தின் அடுத்தப் படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஆதிக்குடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லையாம். ஏனென்றால் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கின் போது ஆதிக்குக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே மோதல் எழுந்து அதன் காரணமாக அவர் வேண்டாம் என சொல்வதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அஜித் எடுக்கும் முடிவைப் பொறுத்துதான் இறுதிகட்ட முடிவு எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.