காஜலை தலையில் தூக்கிவைத்து ஆடும் டோலிவுட்: காரணம் இதுதானாம்....

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (20:44 IST)
நடிகை காஜல் அகர்வால் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். செம் பிஸியாக இருக்கும் காஜல் அகர்வாலை டோலிவுட் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறதாம். இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்....
 
ஸ்ரீராம் ஆதித்யாவின் இயக்கத்தில் நானி, நாகர்ஜுனா நடிக்கும் படத்தில் காஜல் அகர்வாலை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தனர். இது குறித்து காஜலிடம் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது. கதை பிடித்திருந்தும் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம் காஜல். 
 
காரணம், மற்ற படங்களில் பிசியாக இருப்பதால் நண்பன் நானியின் படத்தில் நடிக்க முடியாது என்று காஜல் இயக்குனர் ஸ்ரீராமிடம் தெரிவித்துள்ளார். அதோடு இந்த கதாபாத்திரத்திற்கு ரகுல் ப்ரீத் சிங் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனரிடம் பரிந்துரை செய்துள்ளார்.
 
இயக்குனர் ஸ்ரீராம், ரகுல் ப்ரீத் சிங்கை அணுகி தனது படத்தில் நடிக்குமாறு கேட்க அவர் சம்மதித்துள்ளார். காஜல் செய்துள்ள இந்த காரியத்தை டோலிவுட்காரர்கள் பாராட்டி வருகின்றனர். 
 
டோலிவுட் ஹீரோக்களுக்கு பிடித்த நடிகை காஜல். ஹீரோக்கள் ஷூட்டிங்கிற்கு லேட்டாக வந்தால் கோபம் அடையாமல் பொறுமையாக காத்திருந்து நடித்து கொடுக்கும் குணமுடையவராம்  காஜல்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்