கபாலிக்கும் மோகன்லாலுக்கும் என்ன சம்பந்தம்...? இருக்கிறதே. கபாலியின் கேரள திரையரங்கு உரிமையை மோகன்லாலின் மேக்ஸ் லேப் நிறுவனம் வாங்கியுள்ளது.
கபாலி படத்துக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கேரளாவிலும் படத்தை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். கேரள திரையரங்கு உரிமையை பெறுவதற்கு கடும் போட்டி நிலவியது. கடைசியில் மோகன்லாலின் மேக்ஸ் லேப் நிறுவனம் படத்தின் கேரள உரிமையை 8.5 கோடிகளுக்கு வாங்கியுள்ளது.
இதுவரை இவ்வளவு அதிக தொகைக்கு ஒரு தமிழ்ப் படம் வாங்கப்பட்டதில்லை என்பது முக்கியமானது.