'மெர்சல்' படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் டாக்டர்கள் சங்கம்

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (18:23 IST)
கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' திரைப்படம் எந்தவித எதிர்ப்பும் இன்றி ரிலீஸ் ஆகியிருந்தால் அது இன்னொரு 'ஆளவந்தான்' படம் ஆகியிருக்கும். ஆனால் எதிர்ப்புகள் அந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டது.



 
 
அதேபோல் ரொம்ப சுமாரான படமான 'மெர்சல்' படத்தை பேசாமல் விட்டிருந்தாலே வரும் திங்கட்கிழமை கிட்டத்தட்ட பாதி தியேட்டரில் தூக்கப்பட்டிருக்கும். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பாஜகவினர் இந்த படத்திற்கு நல்ல விளம்பரம் தேடி தந்துள்ளனர்.
 
இந்த நிலையில் தற்போது டாக்டர்கள் சங்கமும் இந்த படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் தங்கள் எதிர்ப்பை மீடியாவிலோ அல்லது கோர்ட்டுக்கோ போய் தெரிவிக்க போவதில்லை என்றும், அது தேவையில்லாமல் படத்தை பப்ளிசிட்டி செய்துவிடும் என்றும் கூறிய டாக்டர்கள் சங்கத்தினர் தங்கள் எதிர்ப்பை நேரடியாக இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் நேரடியாக தெரிவிக்கவுள்ளதாக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்