பொங்கலுக்கு வெளியாகும் படத்தை தடை செய்ய கோரும் தமிழக காங்கிரஸ்

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (19:15 IST)
விஜய் நடித்த 'மெர்சல்', 'சர்கார்' உள்பட பல திரைப்படங்கள் அரசியல்வாதிகளின் விமர்சனங்களுக்கு உள்ளாகி பெரும் பிரச்சனைகளை சந்தித்தது என்பது தெரிந்ததே. ஒரு திரைப்படத்தை பொழுதுபோக்கு அம்சமாக பார்க்காமல் அந்த படத்திற்கு போராட்டம் என்ற பெயரில் இலவச விளம்பரம் செய்து வரும் அரசியல்வாதிகளை நெட்டிசன்கள் பலவிதமாக கிண்டல்கள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ள படங்களில் ஒன்று 'தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர். முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வாழ்க்கை வரலாறு குறித்த இந்த படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதி தரக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழக  தமிழக தலைமைச்செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படம் தமிழகத்தில் வெளிவருமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் 10 ஆண்டு காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் அடங்கியுள்ள இந்த படம் இந்தியா முழுவதிலும் வெளியாகவுள்ள போதிலும், தமிழகத்தில் மட்டுமே எதிர்ப்பு கிளம்பியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்