’துணிவு படத்தின் இரண்டு முக்கிய கேரக்டர்கள் அறிமுகம்!

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (11:46 IST)
அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன 
 
துணிவு படத்தின் டிரைலர் வரும் 31-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களின் அறிமுகம் தற்போது நடைபெற்று வருகிறது 
 
நடிகர் பிரேம் என்பவர் பிரேம் என்ற கேரக்டரில் துணிவு படத்தில் நடித்திருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் இந்த படத்தில் மாய்பா என்ற கேரக்டரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இன்னும் சில கேரக்டர்களை அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் மஞ்சுவாரியர் வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை எச் வினோத் இயக்கி உள்ளார் என்பதும் ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்