அஜித்தின் ’ஏகே 62’ படத்தில் மூன்று நாயகிகளா? விக்னேஷ் சிவனின் திட்டம்

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (16:29 IST)
அஜித் நடித்து முடித்துள்ள துணிவு படத்தின் ரிலீஸ் பொங்கல் என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’ஏகே 62 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தில் அஜீத் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்னும் இரண்டு நாயகிகள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த இரண்டு நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்றும் மற்றொருவர் நயன்தாரா என்றும் கூறப்படுகிறது
 
நயன்தாரா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிக்க இருக்கிறார் என தெரிகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்து உறுதியான செய்து விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் இந்த படத்தில் பாடல்கள் கம்போசிங் பணியை அனிருத் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்