கட்டண முறையில் ஓடிடியில் வெளியாகும் பொன்னியின் செல்வன்: ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (15:59 IST)
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 500 கோடி ரூபாய் வசூலாகியுள்ள நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பில் நவம்பர் 4ஆம் தேதி அமேசான் ஓடிடியில் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .ஆனால் அதே நேரத்தில் இந்த படம் ரெண்ட் அடிப்படையில்தான் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டுள்ளதால் இந்த படத்தை பார்ப்பதற்கான தனியாக கட்டணம் கட்டவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனால் அமேசான் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் ஒரு சில நாட்கள் கழித்து ரெண்ட் இல்லாமல் இந்த படத்தை பார்க்கும் வசதி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்