’’நான் விமானத்தில் ஏறும் போதெல்லாம் ....’’சூரரைப் போற்று படம் குறித்து கிரிக்கெட் வீரர் விமர்சனம்

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (20:51 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அமெசான் வீடியோ பிரைமில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை பற்றி பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நல்ல விமர்சனங்கள் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட்  அணி வீரர் அஷ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் சூரரைப் போற்று படத்தைப் பற்றி கூறியுள்ளதாவது :

’’இனிமேல் நான் ஒவ்வொருமுறை விமானப் பயணத்திற்காக விமானத்தில் ஏறும்போதும் சூரரைப் போற்று படம் நியாபகம் வரும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப்பதிவுக்கு சூர்யா ரசிகர்கள் டுவிட்டரில் லைக் குவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்