இந்தி சீரியல் ஒன்றில் பாகுபலியில் அனுஷ்கா நடித்த தேவசேனா காதாபாத்திரம் பெயரில் கார்த்திகா நாயர் நடிக்க உள்ளார்.
தமிழில் கோ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கார்த்திகா நாயர். தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் நடித்தார். ஆனால் தொடக்கத்திலே அவருக்கு மார்க்கெட் இல்லாத காரணத்தினால் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
பாகுபலி படத்திற்கு கதை எழுதிய ராஜமௌலி தந்தை பாகுபலியை போலவே வரலாற்று பின்னணி கொண்ட இந்தி சீரியல் ஒன்றுக்கு கதை எழுதி வருகிறார். அதில் நாயகி பெயர் தேவசேனா. கார்த்திகா நாயர் தேவசேனா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாகுபலியில் அனுஷ்காவின் கேரக்டரைப் போன்றே, சீரியலில் கார்த்திகாவின் வேடம் வலிமை மிக்கதாக இருக்குமாம்.