இது உதவி இல்ல நன்றிக்கடன்.. 1 கோடி ரூபாய்க்கு நல உதவிகள் செய்யும் நடிகர் கார்த்தி!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (11:44 IST)
தனது 25வது படமான ஜப்பான் ஆடியோ விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மக்களுக்கு உதவும் திட்டங்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.



இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ஜப்பான். தீபாவளிக்கு வெளியாகும் இந்த படம் கார்த்திக்கு 25வது படமும் கூட இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி தனது 25வது படத்தை முன்னிட்டு மக்களுக்கு உதவும் வகையில் 1 கோடி வழங்குவதாக தெரிவித்துள்ளார். அதன்படி, 25 சமூக செயற்பாட்டாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.

நிதி பற்றாக்குறையால் சிரமப்படும் 25 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு பள்ளி ஒன்றுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியாக வழங்கப்பட உள்ளது. மருத்துவமனைகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 25 லட்சமும், 25 நாட்களுக்கு சுமார் 25,000 பேர் தினசரி பசியாறும் வகையில் ரூ.25 லட்சம் என மொத்தமாக ரூ.1 கோடிக்கு உதவிகளை அறிவித்துள்ளார் நடிகர் கார்த்தி. மேலும் இது உதவி அல்ல என்றும் மக்கள் தனக்கு அளிந்த அங்கீகாரத்திற்கான நன்றி கடன் என்றும் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்